GrassField

 

கிளிக்கூண்டு மண்டபம்

Page history last edited by Pandian R 1 yr ago

பொற்றாமரைக் குளத்திற்கு வடமேற்கில் கிளிக்கூண்டு மண்டபம் இருக்கிறது. பெயரைப் போலவே அந்தக்கூடத்தில் உள்ள கூண்டுகளில் கிளிகள் வளர்க்கப்படுகின்றன. அவை மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும் வகையில் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த மண்டபத்தில் 28 ஒரே கல்லினால் ஆன தூண்களும், அதில் இந்து சரித்திரம் வெளிப்படும் வகையில் பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன் அவர்களைத் தொடர்ந்து இடையராது தொடரும் யாளிகளும் சிலைகளாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

 

இச்சிலைகள் விஜயநகர மன்னர்கள் வடித்ததாகச் சொல்கிறார்கள். சொல்லப்போனால் கோவிலின் ஒவ்வொரு கூடத்திலும் குறைந்தது நான்கைந்து தூண்களாவது விஜயநகரக் கலைப்பாணியைச் சொல்கிறது. இந்த மண்டபத்தின் தென்கோடியில் ஸ்தல விநாயகர் ஆலயம் உள்ளது.

Comments (0)

You don't have permission to comment on this page.