இந்தப் பகுதியில் கோயிலின் பரப்பும் அதன் அமைப்பையும் பார்க்கலாம். மதுரை மாநகரின் நடுநாயகமான இந்தக் கோயில்750x830 அடி பரிமாணத்தில் 25ஏக்கர் அளவில் அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பனிரெண்டு கோபுரங்களும் கடவுள் மற்றம் புனித தேவதைகளின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச் சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிட பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்கமுடியும். இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும்
மீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு. இந்தக் கோபுரங்களைப் பற்றிய சிறப்புப் பகுதி அடுத்த பக்கத்தில் வர இருக்கிறது.
இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.

கோயில் மதில்சுவருக்கு உள்ளேயே இருப்பவை ஆடிவீதிகள் என்றும், மதிலுக்கு வெளியே உள்ளவை சித்திரை வீதிகள் என்றும், பிறகு ஆவணி மூல வீதிகள் பிறகு மாசி வீதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன (பார்க்க மாநகர வரைபடம்). பிறகு இருப்பவை வெளி வீதிகள் ஆகும். அந்தந்த மாதங்களில் அந்தந்த வீதிகள் சுவாமியும் அம்பாளும் வலம் வருவதைக் குறிக்கும் வகையில் அந்த வீதிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, பாண்டிச்சேரி நகரங்களும் இதே அமைப்பை ஒத்திருப்பதைப் பார்க்கிறோம். கிழக்கு மேற்காக நீண்டுள்ள இந்த முழு அமைப்பும் நான்கு திசைகளிலும் உள்ள கோபுரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
Comments (0)
You don't have permission to comment on this page.