GrassField

 

சித்திரை வீதியில் ஒரு பயணம்

Page history last edited by Pandian R 1 yr ago

கம்பீரமான கோயில் கோபுரங்கள்

 

இராஜகோபுரம்

 

ராஜகோபுரம் உள்ளிட்ட எழிலார்ந்த மீனாக்ஷி கோயில் கோபுரங்கள்

புது மண்டபம் தாண்டி, கிழக்கில் முடிவடையாத ராஜகோபுரம் உள்ளது. இந்தப் பெரிய கோயில் கோபுரம் 174x107 அடிகள் அளவிலான அடிப்பரப்பைக் கொண்டுள்ளது. நுழைவாயில் 22 அடிக்கு உள்ளது. இதன் ஒரே கல்லினால் ஆன தூண்கள் கிட்டத்தட்ட 30 மீட்டர்கள் இருக்கின்றன. திருமலை நாயக்கர் இந்த மகாபெரிய செயலை ஆரம்பித்தவர். ஆனால் பணிகள் முடியும் முன்னே இவர் காலமானார்.

கிழக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 161'3". 1011 சிற்பங்கள்

 

அம்மன் வாசல்

 

கிழக்கு சித்திரைவீதியிலேயே, இராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது இக்கோபுரம். ஒரு நுழைவாயில் போன்ற அமைப்பை ஒத்திருக்கும் இந்த கோபுரம் அம்மன் சந்நிதிக்கு நேரே உள்ளது.

 

தெற்கு கோபுரம்

 

ஒன்பது தளங்கள் கொண்ட இந்தத்தெற்கு கோபுரம் 170'6" உயரத்துடன் 1511 சிற்பங்களைக் கொண்டுள்ளது. வெளிச்சுற்றுகளிலேயே உயரமாக மிகவும் கம்பீரமாக இந்தக் கோபுரம் வீற்றிருக்கிறது. தெற்கு கோபுரத்திலிருந்து நேரே சென்று பெரியார் பேருந்து நிலையத்தை அடையலாம்

 

மேற்கு கோபுரம்

மேற்கு கோபுரத்திலும் ஒன்பது தளங்கள் உள்ளன. 163'3" உயரத்துடன் 1124 சிற்பங்களைக் கொண்டிருக்கும் இந்த கோபுரம் டவுன்ஹால் ரோடு வழியாக மதுரை ரயில்வே சந்திப்பைச் சென்றடைகிறது.

 

வடக்கு கோபுரம்

கிழக்குக் கோபுரத்தை ஒத்து கட்டப்பட்டுள்ள இந்த வடக்கு கோபுரம் ஒன்பது தளங்களுடன் 160'6" உயரமுடையது. மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்களே இதில் காணப்படுகிறது. கோபுரத்தின் பெரும்பகுதி தூண், பிள்ளைக்கால்கள் போன்றவைகளால் பின்னப்பட்டிருக்க, சிலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்.

 

வேலை முடியாத ஒரு கிழக்கு வாசல்

இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.

 

நீங்கள் இந்த ஐந்து வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். பெரும்பாலும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையை, மக்கள் அதிகம் விரும்புவதில் ஏதும் வியப்பில்லையே. இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதன் பெரிய வடிவமும், பரிமாணங்களும் சிதம்பரம் கோயிலை ஒத்திருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம் படி இருக்கின்றது. இங்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் பெறப்படுவதாகவும், இங்கு பொய்சொன்னால், அவருக்கு உடனடி தண்டனையாக மரணம் ஏற்படுவதாக கிராமத்து பேச்சு வழக்குகள் தெரிவிக்கின்றன

Comments (0)

You don't have permission to comment on this page.