GrassField

 

வசந்த மண்டபம்

Page history last edited by Pandian R 1 yr ago

மண்டபம்

இந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த மண்டபம் புதுமண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. 22 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த மண்டபத்திற்கு மூன்று புறம் பாதையுள்ளது. 333x105 அடிகள் என்ற அளவில் செவ்வக வடிவில் இந்த மண்டபம் இருக்கிறது. மண்டபத்தின் மேற்குக் கோடியில் உள்ள மார்பிள் இருக்கை இறைவன்-இறைவியின் ஆசனமாக உபபோகப்படுத்தப்படுகிறது. வசந்தோத்சவம் என்று சொல்லப்படுகிற இளவேனிற்கால திருவிழா வைகாசி மாதம் இந்த மண்டபத்தில் வைகாசி மாதம் (மே/ஜுன்) நடைபெறுகிறது.

இந்த மண்டபத்தின் தூண்களில் சிவன், மீனாட்சி, அவர்களின் திருமணம் இவற்றுடன் மதுரையை நிர்மாணித்த விஸ்வநாத நாயக்கர் முதல் திருமலை நாயக்கர் உட்பட பத்து நாயக்கர்கள் மற்றும் அவரது துணைவிகள் ஆகியோரது சிற்பங்கள் புடைக்கப்பட்டுள்ளன. யாளிகள் நிறைந்திருக்கும் இந்த மண்டபத்தில் உள்ள குதிரைவீரர்களின் குதிரைக் குளம்புகள் சிப்பாய்களின் தோள்களில் ஓய்வெடுக்கின்றன.

பத்ரகாளி

புது மண்டபத்தில் உள்ள அழகான சிற்பங்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. ஏகபாதமூர்த்தி
  2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி
  3. குதிரை வீரர்கள்
  4. கஜயுகர்
  5. தடாதகைப் பிராட்டியார்
  6. சூரியன்
  7. புலிக்குப் பால்கொடுத்தது
  8. பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தது
  9. சந்திரன்
  10. சுந்தரேஸ்வரர்
  11. துவாரபாலகர்கள்
  12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)
  13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை
  14. கருங்குருவிக்கு உபதேசம்
  15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்
  16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது
  17. பதஞ்சலி
  18. வியாக்ரபாதர்
  19. பத்ரகாளி
  20. ஊர்த்துவ தாண்டவர்

    மீனாக்ஷி கல்யாணம்

  21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி
  22. பிரம்மா
  23. தேவேந்திரன்
  24. அர்த்த நாரீஸ்வரர்
  25. சங்கர நாராயணர்
  26. அதிகார நந்தி
  27. கைலாச பர்வதம்
  28. திரிபுரஸம்ஹாரம்

ராவணன் கைலாயத்தைக் அசைக்கும் காட்சி

Comments (0)

You don't have permission to comment on this page.