GrassField

 

திருநாகேஸ்வரம்

Page history last edited by Pandian R 9 mos ago

பயண விபரம்

கும்பகோணம் காரைக்கால் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய சிற்றூர். 

 

பேருந்து நிலையம்: திருநாகேஸ்வரம், கும்பகோணம் (6 கிமீ)

ரயில்நிலையம்: திருநாகேஸ்வரம், கும்பகோணம் (6 கிமீ)

விமான நிலையம்: திருச்சிராப்பள்ளி (110 கிமீ)

 

அமைந்துள்ள கோயில்கள்

திருநாகேஸ்வரம் நாகநாதர் ஆலயம்

உப்பிலியப்பன் ஆலயம்

 

நாகநாதர் ஆலயம்

இறைவன்: நாகேஸ்வரர்

இறைவி: கிரிகுஜாம்பிகை

 

வரலாறு

காலம்: கண்டராதித்த சோழன் காலம்

16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன (கண்டராதித்த சோழன், இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை)

 

புராணம்

நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர் பெற்றது.

சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.

ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

Comments (0)

You don't have permission to comment on this page.